தெய்வீக ஆத்ம சிகிச்சை

உடலைத் தொடாமல் சிகிச்சை அளிக்க உதவும்
சிறப்பு வாய்ந்த பல்வேறு
தெய்வீக ஆத்ம சிகிச்சை வழிமுறைகள்
இரண்டு பாடநூல்களாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நூல்களையும் பலமுறை படித்து
பொருள் உணர்ந்து சிகிச்சை அளித்தால்
மிகச்சிறந்த குணமளிப்பவராக திகழ்வீர்கள்.

தெய்வீக ஆத்ம சிகிச்சை

உடலைத் தொடாமல், மருந்து இல்லாமல், இயற்கை உயிர்ச் சக்திகளையும், எண்ண சக்தியையும், தெய்வீக சக்தியையும் பயன்படுத்தி ஆத்மாவை / ஆத்ம சக்தியை தூய்மையாக்கி - உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தொன்மையான ஆன்மிக கலையின் விஞ்ஞானப் பூர்வமான சிகிச்சை முறையே “தெய்வீக ஆத்ம சிகிச்சை” ஆகும்.
மருந்தில்லாத மருத்துவ துறையில் பலரும் சேவையாற்ற வேண்டும், குறிப்பாக இளைஞர்கள், யுவதிகள் அதிகமாக இதில் பங்காற்ற வேண்டும் என்பதற்காகவும், மாற்று முறை மருத்துவர்கள் தாங்கள் அளித்து வரும் சிகிச்சை முறையுடன், ஆன்மிக விஞ்ஞான சிகிச்சை முறையையும் இணைத்து உடல், மன பிரச்சனைகளால் அவதியுறும் நோயாளிகளை முழுமையாக குணமாக்கி அவர்களை ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும், ஆனந்தமாகவும் வாழவைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே “தெய்வீக ஆத்ம சிகிச்சை” என்ற புனிதமான தெய்வீகக் கலையை ஸ்ரீ வியாசானந்த மகரிஷி அவர்கள் கற்பிக்கின்றார்கள்.

ஸ்ரீ வியாசானந்த மகரிஷி அவர்களால் கற்பிக்கப்படும் இந்த சிகிச்சை முறைகளின் சிறப்புகள் :

  • இயற்கை, எண்ணம் மற்றும் தெய்வீக சக்திகளை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சை என்பதால் பக்க விளைவுகள் என்பதே இல்லை.
  • நமக்கு நாமே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்களுக்கும் நாம் சிகிச்சை அளிக்கலாம்.
  • உடலைத் தொடாமல் செய்யக் கூடியதே இந்த சிகிச்சை.
  • குடும்பத்தில் மருத்துவ செலவுகள் இதனால் குறையும்.
  • நோயின் அறிகுறியை மட்டுமல்ல, நோயின் மூலக் காரணத்தையும் இதன் மூலம் நிவர்த்தி செய்யலாம்.
  • இதுவரை பல மருந்துகளாலும், மருத்துவ முறைகளாலும் குணமாகாத அனைத்து நாட்பட்ட உடல், மனம் மற்றும் உளவியல் சார்ந்த நோய்களுக்கு விரைவான சிகிச்சையுடன் முழுமையான தீர்வு கிட்டும்.
  • எந்த மருத்துவ துறையில் உள்ளீர்களோ அம் மருத்துவ துறையோடும் இந்த சிகிச்சையை நீங்கள் இணைத்து கொடுக்கலாம். அவ்வாறு சிகிச்சை கொடுக்கும் போது நோயாளியானவர் மிக விரைவாக குணமடைவார்.
  • உடலில் சுற்றுப்பெறும் பல்வேறு விதமான சக்திகளைப் பற்றியும், அவற்றை மேம்படுத்துவதைப் பற்றியும் முழுமையாக நாம் கற்றுக் கொள்ளலாம்.
  • மருந்தில்லாமல், உடலைத் தொடாமல் சிகிச்சை அளிக்கும் நுட்பங்களை யாவரும் முழுமையாக கற்றுக்கொள்ளலாம்.
  • முக்கியமாக இந்த சிகிச்சை முறையை கற்றுக் கொள்வதன் மூலம் மருந்தில்லாத மருத்துவத்துறை தொடர்பான ஆழமான கல்வி ஞானத்தையும், மாற்று மருத்துவ துறை மருத்துவர்கள் தங்கள் சிகிச்சை அளிக்கும் திறனையும் வெகுவாக மேம்படுத்தி கொள்ளலாம்.
  • உடல் சார்ந்த அனைத்து நோய்களுக்கும் இந்த சிகிச்சையின் மூலம் தீர்வினை அளிக்க முடியும். மனம் சார்ந்த பிரச்சனைகள் தான் உடல் பாதிப்புக்கு மூலக்காரணம் (Psychosomatic Disorder)) ஆதலால் நோயின் மூலக்காரணமான மனம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் முழுமையாக நம்மால் குணமாக்கி விட முடியும்.
  • அதேபோல் உளவியல் தாக்குதலால் (கண் திருஷ்டி, தீய சக்திகளால் பாதிப்பு, தீய எண்ண தாக்குதல்) ஏற்படும் உடல், மனம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் முழுமையாக நம்மால் குணமாக்கி விட முடியும்.
  • உடலின் செல் அணுக்களை, உறுப்புக்களை புத்துயிர் ஊட்ட (Regeneration) இந்த சிகிச்சையால் நிச்சயம் முடியும். குறிப்பாக கணையம் (Pancreas) செல்களை புத்துயிரூட்டி நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கையை வெகுவாக நம்மால் குறைக்க முடியும். இந்த புனிதமான சிகிச்சை முறையானது நோயின் அறிகுறியை விட, அதன் மூலக் காரணத்தை முழுமையாக சீர் செய்து, உடல் உறுப்புக்களை இயற்கையான இயக்க நிலையில் இயங்க வைத்து உடல் - மன ஆரோக்கியத்துடனும், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வழிவகைகள் செய்கின்றது.

ஆத்ம ஞானம்

மஹானாக அவதரித்தாலும், மனிதனாகப் பிறந்தாலும்
கற்று உணர்ந்து, பயிற்சி செய்ய வேண்டிய பாடமுறை
"ஆத்ம ஞானம்" ஆகும்.

உலகில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது என்றால்
அது "ஆத்ம ஞானம்" மட்டுமே!
இந்த கல்விஞானத்தை கற்றுக்கொள்ளாத வரையில் நாம் வாழவேண்டிய அற்புதமான தெய்வீக வாழ்க்கையை வாழவோ, அனுபவிக்கவோ முடியாது.

எங்களை பின்தொடரவும்
முகவரி

வியாசானந்த மகரிஷி
பிளாட் எண். G5, தரை தளம்,
பென்வெல்ஸ் பார்க் அபார்ட்மெண்ட்,
பென்வெல்ஸ் சாலை, கண்டோன்மென்ட்,
(அருகில், கண்டோன்மென்ட் காவல் நிலையம், கலை காவேரி கல்லூரி)
திருச்சி - 620 001

தொலைபேசி
+91 63851 96965
+91 97899 22400
மின்னஞ்சல்
info@gurumaharishi.com
Tamil