ஆன்மாவை ஆன்மாவால் உணர்ந்தவராலும்
மட்டுமே ஆன்மாவைப் பற்றி
மற்றவருக்கு கற்பிக்க முடியும்.
ஆன்மாவை புத்தகத்தின் வாயிலாகவோ,
புத்தி, மனம் புலன்களின் வாயிலாகவோ அறிய
இயலாது.
ஆன்மாவை உணர்ந்து,
ஆன்மாவாகவே வாழ்பவரிடம் இருந்து மட்டுமே
கற்றுக் கொள்ள இயலும்.
வியாசா
வியாசா - ஆத்ம ஞான வித்யாலயம், கிளாசிக்கல் ஹீலிங் ரிசர்ச் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையின் ஓர் அங்கம் ஆகும். இந்த அறக்கட்டளை 2001ம் ஆண்டு இந்திய அரசில் பதிவு செய்யப்பட்ட ஓர் அறக்கட்டளை (அரசு பதிவு எண் 30/2001) ஆகும்.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் தெய்வீக நற்குணங்களுடன், ஆரோக்கியமாக, ஆனந்தமாக, திருப்தியாக, நிம்மதியாக, செல்வச்செழிப்பாக மற்றும் இடைவெளி இல்லாத மனநிறைவு உணர்வுடன் கூடிய தெய்வீக வாழ்க்கையை உயிர்ப்புடன் அனுபவித்து வாழ வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளை அடிப்படையாக கொண்டே இந்த அறக்கட்டளை செயல்படுகிறது.
இக்குறிக்கோளை நிறைவேற்றவும், மக்கள் அனைவரும் "வாழ்வியல் நெறி முறைகளை" பின்பற்றி வாழ வேண்டும் என்பதற்காகவே ஆன்மீகம் மற்றும் வாழ்வியல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளையும், பயிலரங்குகளையும், இலவச சிகிச்சை முகாம்களையும், நீரிழிவு நேரய் விழிப்புணர்வு முகாம்களையும் மற்றும் ஏனைய சமூக பணிகளையும் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த அறக்கட்டளை நடத்தி வருகிறது.
அதுமட்டும் இன்றி பள்ளி மாணவ - மாணவிகள், இளம் வயதினர்கள் பயன் பெறும் வகையில் அவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும், இச் சமூகத்தில் ஒழுக்கத்துடன் வாழவும், அவர்களுக்கு இயமம், நியமம் போன்ற நற்குணங்களை மேம்படுத்தும் பயிற்சிகள் இந்த அறக்கட்டளையால் கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
"ஆத்ம ஞான யோகாச்சாரியார்" ஸ்ரீ வியாசானந்த மகரிஷி அவர்கள் இந்த அறக்கட்டளையின் நிறுவன தலைவர் ஆவார். கடந்த 25 ஆண்டுகளாக இம்மனித குலத்திற்கு இறையருளாலும், அக உலக குருமார்களின் அருளாலும் சேவையாற்றி வருகிறார்.
குரு
"ஆத்ம ஞான யோகாச்சாரியார்" ஸ்ரீ வியாசானந்த மகரிஷி அவர்கள் ஒரு தலைசிறந்த ஆன்மிக குரு, நூலாசிரியர் மற்றும் சிகிச்சையாளர்.
தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தனது முதல் திருப்பதிகத்தை பாடிய "திருஞான சம்பந்தர்" அவதரித்த சீர்காழி எனும் திருத்தலத்தில் பிறந்த மஹா ஆத்மாவே "ஸ்ரீ வியாசானந்த மகரிஷி" ஆவார்.
மிக இளம் வயதிலேயே திருஞான சம்பந்தர் சன்னதியிலேயே "ஆத்ம ஞானம்" பெற்று "தான் ஆத்மா" என்பதை பரிபூரணமாக உணர்ந்தவர்.
தனக்கு இறை ஞானத்தால் கிடைக்கப்பெற்ற புனிதமான கல்வி ஞானங்களையும், தன் அக உலக ஆன்மிக குருமார்களால் சூட்சுமமாக உபதேசிக்கப்பட்ட "ஆத்ம ஞானத்தையும், உயர்நிலை யோக முறைகளையும்" குருமார்களின் ஆசீர்வாதத்தோடு அனைவருக்கும் கற்பித்து வருகின்றார்.
ஆத்மா, பரமாத்மா, முக்தி என்கிற மாபெரும் வார்த்தைகளின் இரகசியங்கள் குறித்து உலகெங்கிலும் தேடும்
இலட்சக்கணக்கானவர் களின் ஆன்மிக தாகத்தைத் தணிக்கும் இவருடைய பாடத்திட்டங்கள் நவீன யுகத்தின் உபநிஷதமாக மற்றும் வேத நூலாகப் பேரற்றப்படுகிறது.
ஆத்ம ஞானத்தை மட்டுமல்லாமல் தெய்வீக ஆத்ம சிகிச்சை, காரிய சித்தி மற்றும் உளவியல் பாதுகாப்பு என 15க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆன்மீகம், மருத்துவம் மற்றும் உளவியல் சார்ந்த வகுப்புகளைத் தமிழகம் மற்றும்
பல மேலை நாடுகளிலும் நடத்தி வருகின்றார்கள்.
யோக வாழ்வியல் வாழ்க்கையில் குருவின் பங்கு, தன் மாணவர்களை உடல், மன ஆரோக்கியத்துடனும், மனநிறைவுடனும் வாழ வைத்து, வாழ்வின் அடுத்த பரிமாணங்களை நோக்கி பாதுகாப்பாக அழைத்துச் செல்வதே ஆகும். இந்த அற்புதமான பணியை உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு செய்து வருகிறார் குரு மகரிஷி அவர்கள்.
ஆத்ம ஞானம்
நான் என்ற உணர்விலிருந்து மீள்வதே ஞானம்.
உடல் இருக்கும் வரை உணர்ச்சிகள் இருக்கும்.
உணர்ச்சிகள் இருக்கும் வரை
"நான் என்கிற உணர்வும்" இருக்கும்.
இருப்பினும் உடலும், உணர்ச்சியும் உள்ளபோதே
"நான் என்கிற உணர்வை" விடுவித்தலே
"ஞானம்" ஆகும்.
இந்த ஞானத்தை அடைந்துவிட்டால் வாழும் போதே
பரிபூரண முக்தி நிலையை அடைவது நிச்சயம்.
எங்களை பின்தொடரவும்
முகவரி
வியாசானந்த மகரிஷி
பிளாட் எண். G5, தரை தளம்,
பென்வெல்ஸ் பார்க் அபார்ட்மெண்ட்,
பென்வெல்ஸ் சாலை, கண்டோன்மென்ட்,
(அருகில், கண்டோன்மென்ட் காவல் நிலையம், கலை காவேரி கல்லூரி)
திருச்சி - 620 001
தொலைபேசி
+91 63851 96965